Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரூ.47 கோடி பாக்கியால் உணவு சப்ளை நிறுத்தம்; பெங்களூரின் 11 இந்திரா உணவகத்துக்கு பூட்டு

ரூ.47 கோடி பாக்கியால் உணவு சப்ளை நிறுத்தம்; பெங்களூரின் 11 இந்திரா உணவகத்துக்கு பூட்டு

ரூ.47 கோடி பாக்கியால் உணவு சப்ளை நிறுத்தம்; பெங்களூரின் 11 இந்திரா உணவகத்துக்கு பூட்டு

ரூ.47 கோடி பாக்கியால் உணவு சப்ளை நிறுத்தம்; பெங்களூரின் 11 இந்திரா உணவகத்துக்கு பூட்டு

ADDED : ஜூலை 18, 2024 10:45 PM


Google News
பெங்களூரு: ஒப்பந்த நிறுவனத்துக்கு 47 கோடி ரூபாய் பில் பாக்கி வைத்தததால், உணவு வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பெங்களூரின் 11 இந்திரா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கர்நாடகாவில், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் என, ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்கும் நோக்கில், அன்றைய சித்தராமையா அரசு 'இந்திரா உணவகம்' திட்டத்தை 2016ல் செயல்படுத்தியது.

முதற்கட்டமாக பெங்களூரில், அதன்பின் மற்ற மாவட்டங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன. மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த திட்டம் சித்தராமையாவின் கனவு திட்டமாகும். அவரது செல்வாக்கு அதிகரிக்கவும், காரணமாக இருந்தது.

கடந்த 2018 சட்டசபை தேர்தலில் ஆட்சி மாறியதால், இந்திரா உணவகங்களுக்கு நிதியுதவி வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் நிர்வகிக்க முடியாமல் உணவகங்களை மூடும் சூழ்நிலை உருவானது.

இரண்டாவது முறையாக 2023ல் சித்தராமையா முதல்வரான பின், இந்திரா உணவகத்துக்கு, மறு உயிர் கொடுத்தார்.

ஏற்கனவே இயங்கும் உணவகங்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன், கூடுதல் உணவகங்கள் திறக்கவும் உத்தரவிட்டார்.

பெங்களூரு மாநகராட்சியின், தெற்கு மண்டலத்தில் 11 இந்திரா உணவகங்களுக்கு உணவு வினியோகிக்க ஷெப்டாக் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றிருந்தது. ஆனால், ஓராண்டாக அந்த நிறுவனத்துக்கு, மாநகராட்சி பில் தொகை வழங்கவில்லை. பல முறை கோரியும் பில் தொகை கிடைக்கவில்லை. 47 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.

எனவே, பல நாட்களுக்கு முன்பே, இரவு உணவு வினியோகிப்பதை நிறுத்தியது. நேற்று முன்தினம் முதல் உணவு வினியோகிப்பதை முழுதுமாக ஷெப்டாக் நிறுவனம் நிறுத்தியுள்ளது. 11 இந்திரா உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இந்திரா உணவகங்களுக்கு, உணவு வினியோகிக்கும் ஒப்பந்தம் அளித்த போது, உணவகங்களின் குடிநீர் பில், மின் கட்டண பில்லை அந்த நிறுவனமே செலுத்த வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் ஷெப்டாக் நிறுவனம், குடிநீர், மின்கட்டண பில்களை செலுத்தவில்லை. பில்களை செலுத்தும்படி, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையே காரணம் காண்பித்து, பசவனகுடி, பைரசந்திரா, பத்மநாபநகர், வி.வி.புரம், சித்தாபுரா, ஹொம்பேகவுடா நகர், ஜெயநகர், வித்யாபீடம், ஈஜிபுரா, ஆடுகோடி உட்பட 11 வார்டுகளில் உள்ள இந்திரா உணவகங்களுக்கு உணவு வினியோகிப்பதை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. உணவகங்களுக்கு உணவு வினியோகிக்கும் பொறுப்பு, வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us