Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ லிங்காயத்துக்கு முதல்வர் பதவி ஸ்ரீசைல ஜகத்குரு வலியுறுத்தல்

லிங்காயத்துக்கு முதல்வர் பதவி ஸ்ரீசைல ஜகத்குரு வலியுறுத்தல்

லிங்காயத்துக்கு முதல்வர் பதவி ஸ்ரீசைல ஜகத்குரு வலியுறுத்தல்

லிங்காயத்துக்கு முதல்வர் பதவி ஸ்ரீசைல ஜகத்குரு வலியுறுத்தல்

ADDED : ஜூன் 28, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
பெலகாவி: ''முதல்வரை மாற்றுவதானால், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என ஸ்ரீசைல ஜகத்குரு சென்னசித்தராம பண்டிதராத்ய சிவாச்சாரிய சுவாமிகள் வலியுறுத்தினார்.

பெங்களூரின், கண்டீரவா விளையாட்டு அரங்கில், நேற்று முன் தினம் கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில், ஒக்கலிக மஹாசமஸ்தான மடத்தின் சந்திரசேகர சுவாமிகள் பங்கேற்றார்.

இவர் மேடையில் இருந்த முதல்வர் சித்தராமையாவிடம், 'முதல்வர் பதவியை சிவகுமாரிடம் விட்டு தாருங்கள்' என, பகிரங்கமாகவே வேண்டு கோள் விடுத்தார்.

இந்நிலையில் வீரசைவ லிங்காயத் சுவாமிகள் ஒருவர், தங்கள் சமுதாயத்தினரை முதல்வராக்க வேண்டும் என, குரல் கொடுத்துள்ளார்.

பெலகாவி, சிக்கோடியின், யடூரா கிராமத்தில் ஸ்ரீசைல ஜகத்குரு சென்னசித்தராம பண்டிதராத்ய சிவாச்சாரிய சுவாமிகள், நேற்று அளித்த பேட்டி:

மாநிலத்தில் முதல்வரை மாற்றுவதானால், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே போன்று கூடுதல் துணை முதல்வர்கள் பதவி உருவாக்கினால், லிங்காயத் சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் கன்ட்ரே, மல்லிகார்ஜுன், சிவசங்கரப்பா போன்ற தலைவர்களை துணை முதல்வராக்க வேண்டும். இது தொடர்பாக, காசி, உஜ்ஜியினி ஜகத் குருக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அரசு அமைக்கும் போது, முதல்வர் பதவியை பகிர்ந்தளிப்பது குறித்து, ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால், அதன்படியே நடக்க வேண்டும்.

இம்முறை சட்டசபை தேர்தலில், பெருமளவில் லிங்காயத் சமுதாயத்தினர் காங்கிரசை ஆதரித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us