17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகள்
17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகள்
17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 29, 2024 04:09 AM

புதுடில்லி: ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, நாட்டில் உள்ள 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததை அடுத்து, அதில் மிகப்பெரிய அளவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முற்றிலுமாக மாற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ல் நடைமுறைக்கு வருகின்றன.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்பணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக, 40 லட்சம் பணியாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித்துறை பணியாளர்களுக்கும் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வுகளில், புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பு, அதில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.