ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்திய சோனியா, ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சாடல்
ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்திய சோனியா, ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சாடல்
ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்திய சோனியா, ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சாடல்
UPDATED : ஜூலை 30, 2024 01:09 PM
ADDED : ஜூலை 30, 2024 12:55 PM

புதுடில்லி: ராகுலும், அவரது தாயாரும் (சோனியா) 10 ஆண்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தினர் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
லோக்சபாவில் ராகுல் பேசுகையில், ‛‛மகாபாரதத்தில் சக்கரவியூகம் அமைக்கப்பட்டு, அதில் அபிமன்யூ கொல்லப்பட்டார். சக்கரவியூகம் என்பதை பத்ம வியூகம் என்றும் கூறுவது உண்டு. அப்படியெனில், அதை தாமரை வடிவிலான வியூகம் எனலாம். இந்த 21ம் நுாற்றாண்டிலும், அதே மாதிரியான சக்கர வியூகம் அமைக்கப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், பிரகலாத் ஜோஷி கூறியதாவது: நான் ராகுல் இடம் ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். ராகுலும், அவரது தாயாரும் (சோனியா) 10 ஆண்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்தினர். காங்கிரசின் ஊழலை தடுக்க எங்கள் அரசு ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் ஊழலை நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் அவர்களது ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைக்க ராகுல் இப்படி பேசுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.