தந்தையை கொலை செய்து தீயிட்டு எரித்த மகன் கைது
தந்தையை கொலை செய்து தீயிட்டு எரித்த மகன் கைது
தந்தையை கொலை செய்து தீயிட்டு எரித்த மகன் கைது
ADDED : ஜூன் 12, 2024 02:52 AM

மூணாறு:மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் ஆனகுளத்தில் தந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆனகுளத்தில் தங்கச்சன் 60, மகன் பிபினுடன் 36, வசித்து வந்தார்.
இரு நாட்களாக தங்கச்சன் வெளியில் நடமாடவில்லை என்பதால் அப்பகுதியினர் விசாரித்தனர்.
அவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை சிலர் சென்று பார்த்தபோது தங்கச்சன் தீவைத்து எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இடுக்கி எஸ்.பி., விஷ்ணு பிரதீப் உத்தரவின்படி டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
பிபினை இரண்டு நாட்களாக காணவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. அவர் மாங்குளம் பகுதியில் பதுங்கி இருந்தார்.
நேற்று அவரை போலீசார் விசாரித்தபோது தந்தையை கொலை செய்து தீவைத்தது தெரியவந்தது.
பிபினை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: பிபின் தந்தையிடம் பணம், நகை கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். ஜூன் 9 மாலை வழக்கம் போல் பணம், நகை கேட்டு தகராறு செய்தார்.
ஆத்திரத்தில் கம்பால் தந்தை தலையில் பலமாக அடித்ததில் மயங்கி விழுந்தார். அதன்பிறகு அவரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் என்றனர்.