அவைக்குறிப்பில் சில வரிகள் நீக்கம்: ராகுல் கருத்து
அவைக்குறிப்பில் சில வரிகள் நீக்கம்: ராகுல் கருத்து
அவைக்குறிப்பில் சில வரிகள் நீக்கம்: ராகுல் கருத்து
UPDATED : ஜூலை 02, 2024 01:27 PM
ADDED : ஜூலை 02, 2024 09:39 AM

புதுடில்லி; லோக்சபாவில் நேற்று (ஜூலை-1) நிகழ்த்திய ராகுலின் பேச்சில் சில வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எதிர்கட்சி தலைவர் ராகுல் நேற்று ஆளும் பா.ஜ.,வினரை கடுமையாக சாடினார். இதனால் அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் ஆற்றிய உரையில் இருந்து ஹிந்துக்கள், பா.ஜ., நீட் தேர்வு வியாபாரமானது குறித்து பேச்சு, அக்னிவீர், பிரதமர் மோடி, அதானி குறித்த தனிப்பட்ட தாக்குதல் ஆகியன லோக்சபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பார்லி., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ராகுல் கூறியதாவது: எனது பேச்சில் எதை வேண்டுமானாலும் நீக்கட்டும். ஆனால் நான் பேசியது உண்மைதான். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை. ஆனால் யதார்த்தத்தில் நீக்க முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொன்னேன் அதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.