எஸ்.எம்.வி.டி., - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
எஸ்.எம்.வி.டி., - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
எஸ்.எம்.வி.டி., - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : மார் 12, 2025 05:59 AM
பெங்களூரு; 'ஹோலியை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக, விசாகப்பட்டினம் - பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையம் இடையே 16, 17, 23, 24 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் எண் 08549: விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி., எனும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையம் சிறப்பு ரயில், விசாகப்பட்டினத்தில் இருந்து மார்ச் 16, 23ம் தேதிகளில் மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 08550: எஸ்.எம்.வி.டி., - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில், எஸ்.எம்.வி.டி.,யிலிருந்து 17, 24ம் தேதிகளில் மாலை 3:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.
ரயில் எண் 03251: பீஹாரின் தானாப்பூர் - எஸ்.எம்.வி.டி., விரைவு ரயில், மே 26ம் தேதி வரை வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும்.
எண் 03252: எஸ்.எம்.வி.டி., - தானாப்பூர் விரைவு ரயில், மே 28ம் தேதி வரை, வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும்.
எண் 03259: தானாப்பூர் - எஸ்.எம்.வி.டி., வாராந்திர விரைவு ரயில், மே 27ம் தேதி வரை வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும்.
எண் 03260: எஸ்.எம்.வி.டி., - தானாப்பூர் வாராந்திர விரைவு ரயில், மே 29ம் தேதி வரை வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.