Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கர்நாடக அரசின் 2020ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

கர்நாடக அரசின் 2020ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

கர்நாடக அரசின் 2020ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

கர்நாடக அரசின் 2020ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

ADDED : மார் 12, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு; கர்நாடக அரசின் 2020ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக பிரஜ்வல் தேவராஜ், சிறந்த நடிகையாக அக் ஷதா பாண்டவபுரா தேர்வாகி உள்ளனர்.

கர்நாடக அரசின் 2020ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகளை யார், யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தேசிய விருது பெற்ற இயக்குனர் லிங்கதேவரு தலைமையிலான குழுவில் இடம் பெற்று இருந்த பத்திரிகையாளர் பத்மா ஷிவமொக்கா, இயக்குனர் உமேஷ் நாயக், மூத்த நடிகை பத்மா வசந்தி உள்ளிட்டோர் தேர்வு செய்தனர். இதற்கான பட்டியல் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

சிறந்த திரைப்படம்:

1.பிங்கி எல்லி

2.வர்ண படலா

3.ஹரிவ நதிகே, மையெல்லா காலு

சிறந்த சமூக நல திரைப்படம்:

1.கிலியு பஞ்சரதொல்லில்லா

2.ஈ மண்ணு

சிறந்த பொழுது போக்கு திரைப்படம்:

போர் வால்ஸ்

சிறந்த குழந்தைகள் திரைப்படம்:

பதகா

சிறந்த கர்நாடக மொழி திரைப்படம்:

ஜீட்டிகே (துளு)

சிறந்த நடிகர்:

பிரஜ்வல் தேவராஜ் - பிங்கி எல்லி

சிறந்த நடிகை:

அக் ஷதா பாண்டவபுரா - பிங்கி எல்லி

சிறந்த அறிமுக இயக்குனர்:

கணேஷ் ஹெக்டே - நீலி ஹக்கி

சிறந்த துணை நடிகர்:

ரமேஷ் பண்டிட் - தலேதண்டா

சிறந்த துணை நடிகை:

மஞ்சுளம்மா - தண்டபுராணா

சிறந்த கதை:

சசிகாந்த் கட்டி - ராஞ்சி

சிறந்த திரைக்கதை:

ராகவேந்திர குமார் - சாந்தினி பார்

சிறந்த வசனம்:

வீரப்பா மரலவாடி - ஹுவின ஹாரா

சிறந்த ஒளிப்பதிவு:

அசோக் காஷ்யப் - தலேதண்டா

சிறந்த இசை அமைப்பாளர்:

ககன் படேரியா - மால்குடி டேஸ்

சிறந்த படதொகுப்பு:

நாகேந்திர உஜ்ஜானி - சட்டம் 1978

சிறந்த குழந்தை நட்சத்திரம்- :

மாஸ்டர் அகில் அன்யாரி - தண்ட புரானா

சிறந்த குழந்தை நட்சத்திரம்:

பேபி ஹிதாய்ஷி பூஜார் - பரு

சிறந்த கலை இயக்கம்:

குணசேகர் - பிச்சுஹட்டி

சிறந்த பாடலாசிரியர்கள்:

கார்கி கரேகக்லு - பாடல்: மனுவு மடகாடே, படம்: பர்ஜன்யா

சச்சின் ஷெட்டி கும்ப்ளே - பாடல்: தரியோடு சோட்டக்காடி, படம்: ஈ மந்து

சிறந்த பின்னணி பாடகர்:

அனிருத் சாஸ்திரி - ஆச்சார்யா ஸ்ரீ சங்கர்

சிறந்த பின்னணி பாடகி:

அருந்ததி வசிஷ்டா - தந்த புராணம்

சிறந்த ஜுரி விருது:

சஞ்சாரி விஜய்

ஆடை வடிவமைப்பு:

வள்ளி - சரவர்ஜா

சிறந்த குணசித்திர நடிகர்:

விஸ்வாஸ் - அரபி

சிறந்த தயாரிப்பு மேலாளர்:

சம்பகடம பாபு - கன்னடிகா

முதல் சிறந்த திரைப்படத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு, 50 கிராம் தங்கப்பதக்கம்; இரண்டாவது சிறந்த படத்திற்கு 75,000 ரூபாய் ரொக்கம், 100 கிராம் வெள்ளிப்பதக்கம்; மூன்றாவது சிறந்த படத்திற்கு 50,000 ரூபாய் ரொக்கம், 100 கிராம் வெள்ளிப்பதக்கம்.

சிறப்பு சமூக அக்கறை விருதுக்கு 75,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கிராம் வெள்ளி பதக்கம். சிறந்த நடிகர், நடிகைக்கு தலா 20,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கிராம் வெள்ளி பதக்கம். ஜுரி விருதுக்கு தேர்வாகி உள்ள சஞ்சாரி விஜய், விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us