ஆபாச வீடியோ பகிர்வது பாவம்: உயர் நீதிமன்றம்
ஆபாச வீடியோ பகிர்வது பாவம்: உயர் நீதிமன்றம்
ஆபாச வீடியோ பகிர்வது பாவம்: உயர் நீதிமன்றம்
ADDED : ஜூன் 12, 2024 12:16 AM
பெங்களூரு : ''ஆபாச வீடியோக்களை பகிர்வது மிக பெரிய பாவம்,'' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா கூறினார்.
ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் சில பெண்களுடன் ஆபாசமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதுகுறித்து ஹாசன் சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவானது. காங்கிரஸ் பிரமுகர் நவீன் கவுடா, சேத்தன், சரத் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
பென் டிரைவ் வெளியானதில் எனது பங்கு இல்லை. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சரத் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், ''பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை படம் பிடித்து, பென்டிரைவ் மூலம் பகிர்வது மிக பெரிய பாவ செயல்.
பெண்களை யாரும் மோசமாக சித்தரிக்க கூடாது. இந்த வழக்கில் இப்போதைக்கு நீதிமன்றம் தலையிடாது. குற்றம் சாட்டபட்டவர்கள் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும்,'' என்றார்.