உ.பி.: நான்கு நாட்களில் இரண்டாவது ரயில் விபத்து
உ.பி.: நான்கு நாட்களில் இரண்டாவது ரயில் விபத்து
உ.பி.: நான்கு நாட்களில் இரண்டாவது ரயில் விபத்து
UPDATED : ஜூலை 20, 2024 10:00 PM
ADDED : ஜூலை 20, 2024 09:40 PM

லக்னோ: உ.பி., மாநிலத்தில் நான்கு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.
உ.பி.,மாநிலம் கோண்டாவில் கடந்த18-ம் தேதி சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் வரையில் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா என்னுமிடத்தில் இன்று (20.07.2024) டில்லி லக்னோ ரயில் பாதையி்ல் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இருப்பினும் உயிர்சேதம் இல்லை என கூறப்பட்டுள்ளது. சரக்கு ரயில் மொராதாபாத்தில் இருந்து டில்லி நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் அம்ரோஹாவில் தடம் புரண்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரே மாநிலத்தில் நான்கு நாட்களுக்குள்ளாக இரண்டு முறை ரயில் விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.