'ஜல் தோஸ்த்' இயந்திரம் வாங்கி ஏரிகளை துாய்மையாக்க திட்டம்
'ஜல் தோஸ்த்' இயந்திரம் வாங்கி ஏரிகளை துாய்மையாக்க திட்டம்
'ஜல் தோஸ்த்' இயந்திரம் வாங்கி ஏரிகளை துாய்மையாக்க திட்டம்
ADDED : ஜூன் 16, 2024 10:53 PM

பெங்களூரு: ஏரிகளை துாய்மையாக்க, 'ஜல் தோஸ்த்' என்ற தானியங்கி இயந்திரம் வாங்க, பெங்களூரு மாநகராட்சி ஆலோசிக்கிறது.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி எல்லையில், 167 ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள், தேவையற்ற செடி, கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையால் அசுத்தமடைந்துள்ளன. இவற்றை அகற்றி சுத்தம் செய்து, ஏரிகளை பாதுகாப்பது மாநகராட்சிக்கு சவாலான பணியாகும்.
தற்போது அறிவியல் ரீதியில், ஏரிகளை சுத்தம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்., - கவுன்சில் ஆப் சயின்டிபிக் மற்றும் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஒருங்கிணைப்பில், என்.ஏ.எல்., ஆய்வகத்தின், 'ஜல் தோஸ்த்' என்ற தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தி, ஏரிகளை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இந்த இயந்திரங்கள் விலை குறைவு. குறைந்த எடை, அதிக கழிவுகளை சேகரிக்கும் திறன் கொண்டதாகும். விசாலமான ஏரிகளை சுத்தம் செய்யும். இத்தகைய ஒரு இயந்திரம் வாங்கினால், அனைத்து ஏரிகளையும் சுத்தம் செய்ய முடியும். உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி வரும் பட்ஜெட்டில், இயந்திரம் வாங்குவது குறித்து அறிவிக்கப்படும்.
வெளிநாட்டில் இந்த இயந்திரத்தின் விலை, 2.5 கோடி ரூபாயாகும். பெங்களூரின் என்.ஏ.எல்., நிறுவனம் ஜி.எஸ்.டி., உட்பட 95 லட்சம் ரூபாய் விலையில் இயந்திரத்தை தயாரித்துள்ளது. நான்கு நிமிடங்களில், 4 டன் கழிவுகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.