Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 40 சதவீதம் சரிவு

பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 40 சதவீதம் சரிவு

பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 40 சதவீதம் சரிவு

பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 40 சதவீதம் சரிவு

ADDED : ஜூன் 16, 2024 10:52 PM


Google News
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 40 சதவீதம் குறைந்துள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததே, மாணவர் எண்ணிக்கை குறைய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரில் கல்வி கற்றோர் சதவீதத்தை அதிகரிப்பதில், பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளின் பங்களிப்பு அதிகம். ஆனால் தரமான கல்வி அளிப்பதில் மாநகராட்சி பின் தங்கியுள்ளது. இதன் விளைவாக, மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் என்றால் முகத்தை சுளிப்பவர்களே அதிகம்.

இங்கு தரமான கல்வி கிடைப்பது இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. எனவே கடன் வாங்கியாவது, பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவிய பின் சூழ்நிலை மாறியது. மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்தனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். எனவே பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு, மாநகராட்சி பள்ளிகளுக்கு மாற்றினர்.

இதனால் அரசு, பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக, மாணவர் சேர்க்கை இரண்டு மடங்கு அதிகரித்தது.

ஆனால் கடந்த ஆண்டை விட 2024 - 25ம் கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 40 சதவீதம் குறைந்துள்ளது.

மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் தரமான கல்வி கிடைப்பது இல்லை; அடிப்படை வசதிகளும் இல்லை. சரியான நேரத்தில், மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகங்கள் வழங்கப்படுவது இல்லை.

எனவே மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏழைகளின் பிள்ளைகள் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து விலகுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us