ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா மெட்ரோ சேவை எப்போது?
ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா மெட்ரோ சேவை எப்போது?
ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா மெட்ரோ சேவை எப்போது?
ADDED : ஜூன் 01, 2024 06:43 AM

பெங்களூரு: பெங்களூரு, ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா இடையே 19.15 கி.மீ., மஞ்சள் நிற மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில், நடப்பாண்டு பிப்ரவரியில் பெங்களூரு வந்தடைந்தது. அன்று முதல் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வழித்தடத்தில் தற்போது மின்சாரம், சிக்னல், தொலை தொடர்பு, வேகம் போன்ற சோதனைகள் ஜூன் மாதத்துக்குள் முடிவடையும்.
மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வார். தற்போது இந்த வழித்தடத்தில் ஏதாவது பிரச்னை உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவை அனைத்தும் முடிந்த பின், செப்டம்பர் இறுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இது வெற்றிகரமாக நடந்தால், முறைப்படி ரயில்வே வாரியத்திடம் இருந்து மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி பெறப்படும் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வழித்தடத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்க வேண்டுமானால், ஏழு ரயில்கள் தேவைப்படும். கோல்கட்டாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது மெட்ரோ ரயில், ஆகஸ்ட் மாதத்தில் வர உள்ளது.