சாலையில் தொழுகை வழக்கு நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை
சாலையில் தொழுகை வழக்கு நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை
சாலையில் தொழுகை வழக்கு நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை
ADDED : ஜூன் 01, 2024 06:42 AM
மங்களூரு: மங்களூரில் சாலையில் தொழுகை நடத்திய வழக்கில், நீதிமன்றத்தில், 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மங்களூரு கங்கனாடி பகுதியில், கடந்த 24ம் தேதி சாலையில் முஸ்லிம்கள் சிலர், தொழுகை நடத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலையை மறித்து தொழுகையில் ஈடுபட்டதாக, ஹிந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக கத்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசேகர் வழக்குப் பதிவு செய்தார். இதனால் சோமசேகருக்கு அரசு கட்டாய விடுப்பு அளித்தது. விசாரணை அதிகாரியாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, சாலையில் தொழுகை நடத்தியது தொடர்பாக, மங்களூரு நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், தொழுகை நடக்கவில்லை என்று, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 'சாலையில் மீண்டும் தொழுகை நடத்தினால், அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் இணை ஒருங்கிணைப்பாளர் சரண் பம்ப்வெல் முகநுாலில் பதிவிட்டு இருந்தார்.
இரு மதங்களுக்கு இடையில் பிரச்னை ஏற்படுத்த முயற்சிப்பதாக, சரண் பம்ப்வெல் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இதற்கு மங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சரண் பம்ப்வெலுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று கூறிய அவர், முஸ்லிம்களை திருப்திபடுத்த 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, சித்தராமையா அரசு மீது குற்றம் சாட்டினார்.