மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3 கோடி காணிக்கை
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3 கோடி காணிக்கை
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3 கோடி காணிக்கை
ADDED : மார் 14, 2025 06:37 AM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலின் வருவாயும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 20 நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலானது.
சிவராத்திரி, அமாவாசை, திருவிழா நடந்ததால் உண்டியல் நிரம்பியது. நேற்று முன்தினம் உண்டியல் எண்ணப்பட்டது.
எண்ணும் பணி முடிய இரவானது. 2.85 கோடி ரூபாய் காணிக்கை இருந்தது. தங்க நகைகள், வெள்ளி பொருட்களும் உண்டியலில் இருந்தன.