சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்
சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்
சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்
ADDED : ஜூலை 23, 2024 08:57 PM

மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுபட்டி, குண்டளை அணைகளில் மழையால் முடங்கிய சுற்றுலா படகு சேவை மீண்டும் துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாட்டுபட்டி அணையில் அதிவேக படகு உள்ளிட்டவையும், குண்டளை அணையில் பெடல், காஷ்மீர் சிக்காரியா உட்பட பல்வேறு வகைகளும் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன.
காற்றுடன் பெய்த பலத்த மழையால் இரண்டு அணைகளிலும் சுற்றுலா படகு சேவை ஜூலை 15ல் நிறுத்தப்பட்டன. தற்போது மழை குறைந்ததால் இரண்டு அணைகளிலும் முடங்கிய சுற்றுலா படகு சேவை மீண்டும் துவங்கியது. அதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.