ADDED : ஜூலை 23, 2024 09:00 PM
நொய்டா:புதுடில்லி அருகே, வணிக வளாக மாடியில் இருந்து குதித்து 21 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ் வர்மா, 21. சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்தார். நொய்டாவில் தங்கி வேலை தேடி வந்தார்.
இந்நிலையில் நேற்று, அங்குள்ள வணிக வளாகத்துக்கு வந்த ராஜ் வர்மா, மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், வர்மா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பண நெருக்கடியால் வர்மா தற்கொலை செய்து கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.