Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆண்டுக்கு 3,100 டன் கார்பன் உமிழ்வை குறைக்கிறது என்.சி.ஆர்.டி.சி., சேவை

ஆண்டுக்கு 3,100 டன் கார்பன் உமிழ்வை குறைக்கிறது என்.சி.ஆர்.டி.சி., சேவை

ஆண்டுக்கு 3,100 டன் கார்பன் உமிழ்வை குறைக்கிறது என்.சி.ஆர்.டி.சி., சேவை

ஆண்டுக்கு 3,100 டன் கார்பன் உமிழ்வை குறைக்கிறது என்.சி.ஆர்.டி.சி., சேவை

ADDED : ஜூன் 22, 2024 01:37 AM


Google News
குல்மொஹர்:டில்லி - காசியாபாத் - மீரட் இடையேயான ஆர்.ஆர்.டி.எஸ்., வழித்தடத்தில் சூரிய ஒளி மின்சக்தி கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் ஆண்டுக்கு 3,100 டன் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளதாக, என்.சி.ஆர்.டி.சி., எனும் தேசிய தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை


கால நிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட என்.சி.ஆர்.டி.சி., முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தது. ஆண்டு தோறும் 11,500 டன் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்.சி.ஆர்.டி.சி., இலக்கு நிர்ணயித்தது.

இதற்காக 11 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய அது திட்டமிட்டது. படிப்படியாக தன் ரயில் நிலையங்களில் சோலார் பேனல்களை பொருத்த நடவடிக்கை எடுத்தது.

தற்போது சாஹிபாபாத், குல்தார் ரயில் நிலையங்கள் முழுமையாக சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கி வருகின்றன.

ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 729 கிலோவாட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. துஹாய் 736 கிலோவாட், துஹாய் பணிமனை 585 கிலோவாட், துஹாய் பணிமனை நிலையம் 108 கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்டவை.

தவிர முராத் நகர் துணை மின் நிலையத்தில் 43 கிலோவாட், காசியாபாத் துணை மின்நிலையத்தில் 20 கிலோவாட் சூரிய ஒளிமின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

என்.சி.ஆர்.டி.சி.,க்கு உட்பட்ட மற்ற நிலையங்களில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பயன்பாட்டுக்கு உள்ள சூரிய ஒளி உற்பத்தி சாதனங்கள் வாயிலாக ஆண்டுக்கு 3,100 டன் கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக என்.சி.ஆர்.டி.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்காணிப்பு


ஒட்டுமொத்த சூரிய சக்தி உற்பத்தியானது 'கிளவுட் அடிப்படையிலான அப்ளிகேஷன்' மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சாஹிபாபாத், குல்தார், துஹாய் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், ஒவ்வொன்றிலும் 1,600க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக ஒரு நிலையத்திலும் ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின்சாரச் செலவுகள் கணிசமாகக் குறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us