துப்பாக்கி சூடு கலாசாரம் சிறுமி உட்பட நால்வர் காயம்
துப்பாக்கி சூடு கலாசாரம் சிறுமி உட்பட நால்வர் காயம்
துப்பாக்கி சூடு கலாசாரம் சிறுமி உட்பட நால்வர் காயம்
ADDED : ஜூன் 22, 2024 01:36 AM
ஷாலிமார் பாக்: வடமேற்கு டில்லியில் நேற்று முன் தினம் மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
வடமேற்கு டில்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் வியாழக்கிழமை மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுடத் துவங்கினார்.
இந்த சம்பவத்தில் 14 வயது சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தீவிர சிகிச்சைக்காக எல்.என்.ஜே.பி., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர், தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காண போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.