மருத்துவ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
மருத்துவ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
மருத்துவ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 10:25 PM

பாலக்காடு; பாலக்காடு மாவட்ட மருத்துவ அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்., இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சமீப நாட்களாக இருதய பிரிவில் மருத்துவர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பாலக்காடு சிவில் ஸ்டேஷனில் செயல்படும் மாவட்ட மருத்துவ அலுவலகத்தை, காங்., இளைஞர் அணியினர் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞரணி தலைவர் சதீஷ் திருவாலத்தூர், துணைத் தலைவர் பூவக்கோடு சஜீவ், மாவட்டச் செயலாளர் திலீப் மாத்தூர், மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அதிகாரி வித்யாவிடம் மனு கொடுத்தனர். பேச்சுவார்த்தையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால், முற்றுகை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.