தபால் ஊழியர் கொலை : மனைவி, மைத்துனர் கைது
தபால் ஊழியர் கொலை : மனைவி, மைத்துனர் கைது
தபால் ஊழியர் கொலை : மனைவி, மைத்துனர் கைது
ADDED : ஜூலை 31, 2024 04:33 AM
துமகூரு : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், தபால் ஊழியரை கொலை செய்த மனைவி, மைத்துனர், கள்ளக்காதலனின் நண்பர் என, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகியை சேர்ந்தவர் பிரகாஷ், 32. துமகூரு, கொரட்டகெரேயில் உள்ள தபால் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார்.
'இன்ஸ்டாகிராம்' மூலம், கொரட்டகெரே அருகே மல்லேகாவு கிராமத்தை சேர்ந்த ஹர்ஷிதா, 28, என்பவரின் அறிமுகம் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.
கள்ளக்காதல்
இது, காதலாக மாறியது. பின், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஹர்ஷிதா, முன்னாள் காதலன் குண்டா, 29, என்பவருடன், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பேச ஆரம்பித்தார். இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இது பற்றி அறிந்த பிரகாஷ், மனைவியை கண்டித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஹர்ஷிதா ஓட்டம் பிடித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கணவரிடம் திரும்பி வந்தார். 'இனிமேல் தவறு செய்ய மாட்டேன்' என்று மன்னிப்பு கேட்டதால், கணவர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஹர்ஷிதாவின் தம்பி சோமசேகர், 25, பிரகாஷுக்கு மொபைல் போனில் பேசினார். 'அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடியபடி நிற்கிறேன். என்னை வீட்டிற்கு அழைத்து செல்ல வாருங்கள்' என்று கூறினார்.
ரத்த வெள்ளம்
இதனால் சோமசேகரை அழைத்து வர, பிரகாஷ் சென்றார். ஆனால் பிரகாஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று காலையில், மல்லேகாவு கிராமத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிரகாஷை, மனைவி ஹர்ஷிதா, மைத்துனர் சோமசேகர், கள்ளக்காதலன் குண்டா, குண்டாவின் நண்பர் ரங்கசாமி, 45 ஆகியோர் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொன்றது தெரிந்தது.
ஹர்ஷிதா, சோமசேகர், ரங்கசாமி கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால், பிரகாஷை கொன்றது தெரிந்தது. தலைமறைவாக உள்ள குண்டாவை போலீசார் தேடி வருகின்றனர்.