Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரூ.5.48 கோடி செலவில் போலீஸ் குடியிருப்புக்கு பூஜை

ரூ.5.48 கோடி செலவில் போலீஸ் குடியிருப்புக்கு பூஜை

ரூ.5.48 கோடி செலவில் போலீஸ் குடியிருப்புக்கு பூஜை

ரூ.5.48 கோடி செலவில் போலீஸ் குடியிருப்புக்கு பூஜை

ADDED : ஜூலை 21, 2024 07:26 AM


Google News
Latest Tamil News
தங்கவயல்: தங்கவயல் உரிகம், ஆண்டர்சன் பேட்டை ஆகிய இடங்களில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், தங்கவயல் போலீஸ் எஸ்.பி., சாந்தராஜூ பேசியதாவது:

தங்கவயல் உரிகம், ஆண்டர்சன்பேட்டை ஆகிய இடங்களில் தலா 12 குடியிருப்புகளை கட்டுவதற்கு கர்நாடகா அரசு, 5 கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது. போலீஸ் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு துறையினர் 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தங்கவயலில் போலீஸ் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா விடுத்த கோரிக்கையை, அரசு நிறைவேற்றி உள்ளது. தங்கவயலில் கே.எஸ்.ஆர்.பி., படையின் பயிற்சி மையம் ஏற்படுத்த 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை வகித்த எம்.எல்.ஏ., பேசுகையில், ''சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற இரவு, பகல், வெயில், மழை, காற்று எதுவாக இருந்தாலும் கடமையை செய்து வருவோர் போலீசார் தான். அவர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு குடியிருப்பு மிக அவசியம்.

''பூமி பூஜைக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வருவதாக இருந்தது. ஆனால் சட்டசபைக் கூட்டம் நடப்பதால் வரவில்லை.

திறப்பு விழாவுக்கு நிச்சயம் வருவார். பழுதடைந்து உள்ள பேத்தமங்களா, உரிகம், ஆண்டர்சன் பேட்டை ஆகிய போலீஸ் நிலைய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார், நகராட்சி முன்னாள் தலைவர் முனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தங்கவயல் போலீஸ் குடியிருப்புகளுக்கு நேற்று பூமி பூஜை போடப்பட்டது. போலீஸ் எஸ்.பி., சாந்தராஜு, ரூபகலா எம்.எல்.ஏ., தாசில்தார் நாகவேணி உட்பட பலர் பங்கேற்றனர். இடம்: ஆண்டர்சன்பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us