Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

ADDED : மார் 12, 2025 12:18 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி; புதுச்சேரியில் பெண்களுக்கு இனி மாதம்தோறும் ரூ.2500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 10ம் தேதி துணைநிலை கவர்னர் கைலாஷ்நாத் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந் நிலையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான ரூ, 13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்யை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று (மார்ச் 12) தாக்கல் செய்தார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;

*மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இனி இந்த தொகை ரூ.2500 ஆக வழங்கப்படும்.

*மழைக்கால நிவாரணமாக விவசாய தொழிலாளர்களக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்.

*வாரம் 3 நாட்கள் தரப்பட்டு வந்த முட்டை, இனி வாரம் முழுவதும் தரப்படும்.

*அரசு., அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.

*குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன் இலவச முட்டையும் வழங்கப்படும்.

*6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

*முதியோர் உதவித்தொகை பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்கு தொகை ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us