வியாபாரியை கொல்ல முயன்ற மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
வியாபாரியை கொல்ல முயன்ற மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
வியாபாரியை கொல்ல முயன்ற மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 11, 2024 11:21 PM
பாலக்காடு : பாலக்காடு அருகே, பாரதப்புழா ஆற்றில் குளிக்க சென்ற, கரூரை சேர்ந்த மாட்டு வியாபாரியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர்.
தமிழ்நாடு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன், 40. மாட்டு வியாபாரியான இவர், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் அருகே உள்ள வாணியம்குளம் சந்தைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், வியாபாரம் தொடர்பாக நேற்று காலை ரயிலில் வந்த இவர், ஒற்றைப்பாலத்தில் குளிப்பதற்காக அங்குள்ள பாரதப்புழா ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தலை, முதுகு மற்றும் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிய அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்த ஒற்றைப்பாலம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்பகுதியில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தினர். வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்மகும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.