அடிப்படை வசதிகள் இல்லாத 27 மருத்துவமனைகளுக்கு அபராதம்
அடிப்படை வசதிகள் இல்லாத 27 மருத்துவமனைகளுக்கு அபராதம்
அடிப்படை வசதிகள் இல்லாத 27 மருத்துவமனைகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 10, 2024 04:37 AM
பெங்களூரு : அடிப்படை வசதிகள் இல்லாத, கர்நாடகாவின் 27 மருத்துவமனைகளுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகளில் மருந்துகள், அடிப்படை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடாது. பற்றாக்குறை ஏற்பட்டால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் கர்நாடகாவின் பல மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன.
தேசிய மருத்துவ ஆணையம், ஆய்வு செய்ததில், மாநிலத்தின் 27 மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது தெரிந்தது. இவற்றில் தனியார் மருத்துவமனைகளும் அடங்கும்.