பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய அணி தலைவர் ககன் நரங்
பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய அணி தலைவர் ககன் நரங்
பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய அணி தலைவர் ககன் நரங்
UPDATED : ஜூலை 08, 2024 09:14 PM
ADDED : ஜூலை 08, 2024 09:10 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 16-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடைபெறுகிறது.
இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துவக்க விழா நிகழ்ச்சியின் போது டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுடன், பாட்மின்டன் வீராங்கனை பி.வி..சிந்துவும் இணைந்து இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.