ADDED : ஜூன் 24, 2024 12:14 AM
சுக்மா: சத்தீஸ்கரில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள சுக்மா மாவட்டத்தின் சில்கர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த கமாண்டோ படையினர், ஜாஹர்குண்டா பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக வாகனத்தில் நேற்று மாலை சென்றனர்.
அப்போது, திம்மாபுரம் பகுதியில் சென்றபோது, நக்சல்கள் ஏற்கனவே அப்பகுதியில் வைத்திருந்த குண்டு வெடித்தது.
இதில், வாகனத்தில் இருந்த இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள், காவலர் சைலேந்திரா, 29, வாகன ஓட்டுனர் விஷ்ணு, 35, ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நக்சல்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.