ADDED : ஜூன் 28, 2024 12:50 AM

சர்வாதிகாரி ஒழிய வேண்டும்!
கடவுள் அனைவருக்கும் ஞானத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது. ஆனால் இனி, சர்வாதிகாரம் செய்கின்றவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை யாக இருக்கும்.
சுனிதா
டில்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவாலின் மனைவி
ஏமாற்றிய காங்கிரஸ்!
இந்தியர்கள் குறித்து இனவெறி கருத்து கூறிய காங்கிரசின் சாம் பிட்ரோடாவிடம் இருந்து லோக்சபா தேர்தல் சமயத்தில் அக்கட்சி விலகியிருந்தது. தற்போது மீண்டும் அவரை அப்பதவியில் சேர்த்துள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் மக்களை ஏமாற்றியுள்ளது தெரிகிறது.
சேஷாத் பூனாவாலா
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார்!
லோக்சபா தேர்தலில் ஹரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சி தோற்க காரணம் பா.ஜ., உடன் கூட்டணி வைத்தது தான். தற்போது நடக்க உள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம்.
துஷ்யந்த் சவுதாலா
தலைவர், ஜனநாயக ஜனதா
கட்சி