/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2024 11:17 PM

புதுச்சேரி: மத்திய அரசு லோக்சபாவில் எந்தவித விவாதமின்றி கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, இண்டியா கூட்டணி வழக்கறிஞர்கள் சார்பில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்திற்கு காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருது பாண்டியன், இந்திய கம்யூ., வழக்கறிஞர் ஜீவானந்தம், ராஷீத், கோவிந்தசாமி, தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பரிமளம், லோககணேஷ், முருகையன், வி.சி., வழக்கறிஞர் பிரிவு தலைவர் கார்த்திகேயன், சாலசுந்தரம் உட்பட பலர் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சுரேஷ், ஸ்ரீதர்பாபு, ராமலிங்கம், முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலாளர் கதிர்வேல், தாமோதரன், சுசி கம்யூ., லெனின் துரை, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில இலக்கிய அணி தலைவர் கோவிந்தராசு நன்றி கூறினார்.