ADDED : ஜூன் 26, 2024 01:16 AM

அடையாள வேட்பாளர்களா?
தோற்கப் போகும் தேர்தல்களில் தலித் தலைவர்களை வேட்பாளர்களாக அறிவிப்பது காங்கிரசின் வாடிக்கை. தற்போது லோக்சபா சபாநாயகர் தேர்தலிலும் அதையே செய்துள்ளது. தலித் தலைவர்கள் என்ன வெறும் அடையாள வேட்பாளர்களா?
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர்,
லோக் ஜனசக்தி
இந்த எம்.எல்.ஏ.,க்கள் வரலாம்!
அஜித் பவார் அணியிலிருந்து, எங்கள் அணிக்கு தாவ, சில எம்.எல்.ஏ.,க்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. கட்சியை பலவீனப்படுத்த நினைப்பவர்களை சேர்க்க முடியாது. கட்சிக்கு பலம் சேர்க்க நினைக்கும் எம்.எல்.ஏ.,க்கள் வரலாம். அவர்கள் ஏற்கப்படுவர்.
சரத் பவார்
தலைவர், தேசியவாத காங்கிரஸ்
சரத் பவார் அணி
பாடநுால்களில் எமர்ஜென்சி!
எமர்ஜென்சி, நாட்டின் ஜனநாயகத்தில் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எமர்ஜென்சி என்றால் என்ன, எப்படி திணிக்கப்பட்டது என்பது குறித்து அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ள வசதியாக, அது பற்றி பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
வெங்கையா நாயுடு
முன்னாள் துணை ஜனாதிபதி