ADDED : ஜூன் 20, 2024 01:45 AM

அதிகரிக்கும் வன்முறை!
கண்ணுாரில் வெடிகுண்டு விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு, போதைப்பொருள் புழக்கம் என, சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதை, ஆளும் இடது ஜனநாயக முன்னணி கண்டும் காணாமலும் உள்ளது.
சுரேந்திரன்
தலைவர், கேரள பா.ஜ.,
ஆட்சி கைக்கு வரும்!
லோக்சபா தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி வேலை செய்தனர் என்பதை பார்த்தேன். மாநில சட்டசபை தேர்தலில் இதே போன்று பணியாற்றினால் ஆட்சி மீண்டும் நம் கைகளுக்கு வரும்.
சரத் பவார்
தலைவர், தேசியவாத காங்., சரத் பவார் அணி
பழைய இடத்தில் சிலைகள்!
நம் தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பங்காற்றிய காந்தி, அம்பேத்கர் மற்றும் பிற தேசியத் தலைவர்களின் சிலைகள் பார்லிமென்டில் ஒரு மூலைக்கு இடமாற்றப்பட்டுள்ளன. அந்த சிலைகளை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்