ADDED : ஜூன் 18, 2024 12:39 AM

பா.ஜ.,வின் துணை அமைப்பு!
கடந்த 2014 முதல், பா.ஜ.,வின் அமைப்பின் துணை அமைப்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இது ஒரு தொழில் முறை நிறுவனமே இல்லை. இந்நிறுவனம் அரசியலமைப்பை சீரழித்து வருகிறது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
40 தான் கிடைத்திருக்கும்!
லோக்சபா தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்திருந்தால், பா.ஜ., 240 தொகுதிகளை கைப்பற்றி இருக்காது. வெறும், 40 தொகுதிகளையே வென்றிருக்கும். மும்பை வடமேற்கு தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
ஆதித்ய தாக்கரே
உத்தவ் சிவசேனா பிரிவு
தேர்தல் கமிஷனை நம்ப வேண்டும்!
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை யாராலும், 'ஹேக்' செய்ய முடியாது. இது பற்றி பல முறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. எலான் மஸ்க்கை விட, உச்ச நீதிமன்றத்தையும், இந்திய தலைமை தேர்தல் கமிஷனையும் எதிர்க்கட்சிகள் நம்ப வேண்டும்.
ஷாஜியா இல்மி
பா.ஜ.,
தேசிய செய்தித் தொடர்பாளர்