மர்ம காய்ச்சல்: ஜார்கண்ட் மாநில சிறுவன் பலி
மர்ம காய்ச்சல்: ஜார்கண்ட் மாநில சிறுவன் பலி
மர்ம காய்ச்சல்: ஜார்கண்ட் மாநில சிறுவன் பலி
ADDED : ஜூலை 22, 2024 01:00 AM
மூணாறு : மூணாறு அருகே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் மர்ம காய்ச்சலால் உயரிழந்தது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை விசாரிக்கின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமாசாய். இவர் மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான குண்டுமலை எஸ்டேட் பென்மூர் டிவிஷனில் தொழிலாளியாக வேலை செய்யு மனைவி மான்கிரி, நான்கு வயது மகன் கேதார்சாய் ஆகியோருடன் ஜூலை 18 ல் வந்தார்.
இந்நிலையில் கேதார்சாய் திடீரென கால்ச்சலால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மூணாறில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் வீட்டிற்குச் சென்ற சிறுவனுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. சிறுவனை பெற்றோர் உறங்க வைத்தனர். நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை என்பதால் பெற்றோர் பார்த்தபோது சிறுவன் இறந்த நிலையில் கிடந்தார். மூணாறு போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.