கட்சி உத்தரவுக்கு அடிபணியாத சிலர் கோஷ்டிகள் மீது முனியப்பா கோபம்
கட்சி உத்தரவுக்கு அடிபணியாத சிலர் கோஷ்டிகள் மீது முனியப்பா கோபம்
கட்சி உத்தரவுக்கு அடிபணியாத சிலர் கோஷ்டிகள் மீது முனியப்பா கோபம்
ADDED : ஜூன் 05, 2024 10:10 PM

பெங்களூரு : ''கர்நாடகாவில் 15 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். சிலர் கட்சியின் உத்தரவுக்கு அடிபணியாமல் பணியாற்றியதால், முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது,'' என உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 15 முதல் 20 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். கோலார், சிக்கபல்லாபூர் உட்பட சில இடங்களில், கட்சியின் உத்தரவுக்கு அடிபணியாமல் தொண்டர்கள் பணியாற்றியதால், முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதை கட்சி மேலிட கவனித்துக்கு கொண்டு செல்வேன்.
கோலாரில் தோல்வி அடைந்ததற்கு, அதற்கு பொறுப்பேற்றவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். எங்கள் குடும்பத்துக்குசீட் கொடுக்க கூடாது என்றனர்.
முனியப்பா போட்டியிடவில்லை என்றாலும், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கூறிய கட்சி தலைவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவன். கட்சி மேலிடம் உத்தரவிட்டால், கோலாரில் பிரசாரம் செய்தேன். தோல்விக்கு காரணம் யார் என்பது மக்களே தீர்மானிக்கட்டும்.
முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் ஒற்றுமையாக தேர்தலில் பணியாற்றினர். தலைமை மாற்றத்துக்கும், முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் ரீதியாக சில சமயங்களில் முடிவுகளில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.