லோக்சபா தேர்தல் வேட்டையில் பணம், மதுவை விட தங்கம் அதிகம்
லோக்சபா தேர்தல் வேட்டையில் பணம், மதுவை விட தங்கம் அதிகம்
லோக்சபா தேர்தல் வேட்டையில் பணம், மதுவை விட தங்கம் அதிகம்
ADDED : ஜூன் 01, 2024 04:37 AM
பெங்களூரு : இம்முறை லோக்சபா தேர்தலில், பணம், மதுபானத்தை விட, தங்கநகைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த பின், மே 30 வரை 594 கோடியே ஒரு லட்சத்து 7,567 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், 388 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்முறை லோக்சபா தேர்தலில் பணம், மதுபானத்தை விட, தங்கம் அதிக அளவில் பிடிபட்டது. மே 30 வரை, 101 கோடியே 10 லட்சத்து 62 ஆயிரத்து 204 ரூபாய் மதிப்புள்ள 472. 22 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசியல்வாதிகள், வாக்காளர்களை கவர, விலை உயர்ந்த தங்கத்தை பயன்படுத்தினர் என்பது, பிடிபட்ட தங்கத்தின் அளவில் இருந்து தெரிகிறது.
பெங்களூரு, சிக்கமகளூரு, கோலார் நகரங்களில் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இம்முறை தேர்தல் அதிகாரிகள் சோதனையில், உளவுத்துறையின் பங்களிப்பு அதிகம் இருந்தது.
வர்த்தக வரித்துறை, தொழில்நுட்பத்துறையின் புத்திசாலித்தனம் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களை கவர, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதை, தேர்தல் கமிஷன் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, புகார் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.