யோகி ஆதித்யநாத்துடன் மோகன் பகவத் ஆலோசனை
யோகி ஆதித்யநாத்துடன் மோகன் பகவத் ஆலோசனை
யோகி ஆதித்யநாத்துடன் மோகன் பகவத் ஆலோசனை
ADDED : ஜூன் 13, 2024 08:37 PM

உபி. பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பிரதமராக மோடி கடந்த 09-ம் தேதி பதவியேற்ற பின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முதன்முறையாக கடந்த 10-ம் தேதி பொது நிகழ்ச்சியில் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாக நினைத்துவிடக் கூடாது மணிப்பூர் விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு யாருடையது? அரசு இந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் என பேசினார்.
இந்நிலையில் உ.பி.யில் ஆர்.எஸ். எஸ்., பயிற்சி முகாம் துவங்கியது. இதில் பங்கேற்க வந்துள்ள தலைவர் மோகன் பகவத் கோராக்பூரில் பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி., யில் பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., தோல்வியடைந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது.
இதையடுத்து அதிக லோக்சபா தொகுதிகள் கொண்ட உ.பி.யில் பா.ஜ., ஏன் தோல்வியுற்றது மற்றும் தற்போதைய அரசியல்-சமூக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோகன் பகவத் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.