Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/7 தமிழர்கள் உடல் இன்று வருகை: ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

7 தமிழர்கள் உடல் இன்று வருகை: ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

7 தமிழர்கள் உடல் இன்று வருகை: ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

7 தமிழர்கள் உடல் இன்று வருகை: ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

UPDATED : ஜூன் 14, 2024 02:34 AMADDED : ஜூன் 13, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
சென்னை: குவைத் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ஏழு தமிழர்கள் உடல்கள் குவைத்திலிருந்து விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட உள்ளது.

நாளை காலை 9:30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வர உள்ள ஏழு தமிழர்கள் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்ககப்படும். இதற்காக தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை காலை 6 மணிக்கு கொச்சி செல்கிறார்.

ரூ. 5 லட்சம் நிவாரணம்


முன்னதாக உயிரிந்த 7 பேர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us