ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி
ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி
ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி
UPDATED : ஜூன் 07, 2024 08:30 PM
ADDED : ஜூன் 07, 2024 06:27 PM

புதுடில்லி: ஜனாதிபதியை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி
லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதையடுத்து தே.ஜ., கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டம் இன்று பழைய பாராளுமன்ற வளாகத்தில நடந்தது. இதில் கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்துடன் மாலை ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திர மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது ஆதரவு எம்.பி.க்களின் கடிதத்தையும் வழங்கினார். ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ,மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். வரும் 9-ம் தேதி இரவு 7.15 மணி அளவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் எம்,பி.,க்களும் அமைச்சர்களாக பதவிபிரமாணம் எடுத்து கொள்ள உள்ளனர்.