நவீன உள்கட்டமைப்புகள் துரித வேகத்தில் உருவாக்கப்படும்: நிதின் கட்கரி உறுதி
நவீன உள்கட்டமைப்புகள் துரித வேகத்தில் உருவாக்கப்படும்: நிதின் கட்கரி உறுதி
நவீன உள்கட்டமைப்புகள் துரித வேகத்தில் உருவாக்கப்படும்: நிதின் கட்கரி உறுதி
ADDED : ஜூன் 12, 2024 10:57 AM

புதுடில்லி: 'இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த, நவீன உள்கட்டமைப்புகள் துரித வேகத்தில் உருவாக்கப்படும்' என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் முக்கிய துறைகளை வைத்திருந்த நான்கு முன்னணி அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் அதே பொறுப்புகளில் தொடர்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த அமைச்சர் நிதின் கட்கரியும் நெடுஞ்சாலை துறையை மீண்டும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 12) மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக நிதின் கட்கரி பொறுப்பேற்றார். அவர் அலுவலகத்தில் முறைப்படி பதவியேற்ற புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ‛‛மத்திய அமைச்சரவையில் மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள். தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி செயல்படுகிறார். அவரது தலைமையில், இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த, நவீன உள்கட்டமைப்புகள் துரித வேகத்தில் உருவாக்கப்படும்'' என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 146ன் கீழ் இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது குற்றமாகும். அதன்படி, இன்சூரன்ஸ் இல்லாமல் முதல்முறை பிடிப்பட்டால் 3 மாதம் சிறை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.