' நானும், சோமசேகரும் கர்நாடக சட்டசபை கட்சி' பா.ஜ.,வினருக்கு எம்.எல்.ஏ., சிவராம் பதிலடி
' நானும், சோமசேகரும் கர்நாடக சட்டசபை கட்சி' பா.ஜ.,வினருக்கு எம்.எல்.ஏ., சிவராம் பதிலடி
' நானும், சோமசேகரும் கர்நாடக சட்டசபை கட்சி' பா.ஜ.,வினருக்கு எம்.எல்.ஏ., சிவராம் பதிலடி
ADDED : ஜூலை 21, 2024 07:27 AM

உத்தர கன்னடா: உத்தர கன்னடா மாவட்டம், பனவாசியில் வரதா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை பார்வையிட்ட பின், பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் அளித்த பேட்டி:
காங்கிரசில் இருந்தபோது, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றேன். அப்போது நான் செய்தது, பா.ஜ.,வுக்கு தெரியவில்லையா?
தேவை ஏற்படும்போது மீண்டும் ராஜினாமா செய்து, போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
தொகுதி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. 'நதியை கடந்து, கரையை அடைந்ததும் பா.ஜ.,வினருக்கு படகோட்டி தேவையில்லை'.
சட்டசபையில் எந்த போராட்டத்திலும் பங்கேற்க, எனக்கோ, சோமசேகருக்கோ அழைப்பு வரவில்லை. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. நாங்கள் 'கர்நாடக சட்டசபை கட்சி'.
பா.ஜ.,விட்டு வெளியேறலாமே என்று கேட்கின்றனர். மடியில் கனம் இருந்தால் தான், வழியில் பயம் இருக்கும். எனக்கு அமலாக்கத் துறை உள்ளிட்ட ரெய்டுகளில் பயமும் இல்லை.
அரசியலுக்கு எந்த மூலதனமும் இல்லாமல் வரவில்லை. நான் திருடவும் இல்லை; கொள்ளை அடிக்கவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.