டெங்கு அதிகரிப்பு அமைச்சர்கள் அறிவுரை
டெங்கு அதிகரிப்பு அமைச்சர்கள் அறிவுரை
டெங்கு அதிகரிப்பு அமைச்சர்கள் அறிவுரை
ADDED : ஜூன் 23, 2024 06:39 AM

பெங்களூரு: ''கர்நாடகாவின் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு வருவது தொடர்பாக, மைசூரில் நேற்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
மழைக் காலம் என்பதால் கர்நாடகாவில் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிக்கமகளூரு உட்பட சில மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் உள்ளன. எனினும் நோயாளிகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் அதிகரிக்கும். எனவே, வீட்டின் முன் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
மழைக்காலம் துவங்கியதால், கர்நாடகாவில் டெங்கு அதிகரிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விழிப்புடன் இருக்க வேண்டும். சிகிச்சைக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரிகள், மாநகராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சரண் பிரகாஷ்பாட்டீல்,
மருத்துவ கல்வி துறை அமைச்சர்