மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு
மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு
மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 06, 2024 07:50 PM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
அவரது கோர்ட் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை07) மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் அவரது கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து நீதிபதி காவேரிபவேஜா உத்தரவிட்டார்.