ADDED : ஜூலை 06, 2024 10:16 PM
புதுடில்லி:வடகிழக்கு டில்லி கோகல்புரி கால்வாயில் கிடந்த ஆண் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோகல்புரி கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. அந்த வழியாகச் சென்ற ஒருவர் அதைப் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடலில் காயம் எதுவும் இல்லை எனக் கூறிய போலீசார், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.