கான்கிரீட் பலகை இடிந்து 3 சகோதரர்கள் உயிரிழப்பு
கான்கிரீட் பலகை இடிந்து 3 சகோதரர்கள் உயிரிழப்பு
கான்கிரீட் பலகை இடிந்து 3 சகோதரர்கள் உயிரிழப்பு
ADDED : ஜூலை 06, 2024 10:15 PM
பரிதாபாத்:ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் கான்கிரீட் பலகை இடிந்து உடன்பிறந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
சிக்ரி கிராமத்தில் வசித்த ஆகாஷ்,10, முஸ்கான்,8 மற்றும் ஆதில்,6 ஆகிய மூன்று சகோதரர்களும் நேற்று முன் தினம் மாலை வீட்டு முன் உட்கார்ந்து இருந்தனர். அப்போது கனமழை பெய்தது. வீட்டின் முகப்பில் இருந்த கான்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, பரிதாபாத் 58வது செக்டார் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவின் கீழ் வீட்டு உரிமையாளர் பீஹார் மாநிலம் ஷேக்புராவைச் சேர்ந்த ஜுமர் மீது வழக்குப் பதிவு செய்து தேடுகின்றனர்.