Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ லோக்சபா தேர்தல் தோல்வி ஆம் ஆத்மி ஆலோசனை

லோக்சபா தேர்தல் தோல்வி ஆம் ஆத்மி ஆலோசனை

லோக்சபா தேர்தல் தோல்வி ஆம் ஆத்மி ஆலோசனை

லோக்சபா தேர்தல் தோல்வி ஆம் ஆத்மி ஆலோசனை

ADDED : ஜூன் 15, 2024 01:35 AM


Google News
ரோஸ் அவென்யூ,:ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்து, அடுத்த பொதுத் தேர்தலுக்கு கடினமாக உழைப்போம் என உறுதியளித்ததாக அக்கட்சியின் பொதுச்செயலர் சந்தீப் பதக் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. டில்லியில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அது போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலுமே ஆம் ஆத்மி தோல்வியடைந்தது.

லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் நேற்று டில்லி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி உயர்மட்ட தலைவர்களின் முதல் சந்திப்பு இது. அமைச்சர்களான ஆதிஷி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலர் சந்தீப் பதக் கூறுகையில், “ஆம் ஆத்மி எதிர்பார்த்ததை விடக் குறைவான இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை. அடுத்த தேர்தலில் புதிய ஆற்றலுடன் வருவோம். ஹரியானா, டில்லியில் சட்டசபை தேர்தல்களும், பஞ்சாபில் இடைத்தேர்தல்களும் எங்கள் அடுத்த இலக்கு,” எனகூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பிரதமர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் நாளில், டில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்,” என கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us