வினோத நோயால் அவதி குழந்தைக்கு உதவ அழைப்பு
வினோத நோயால் அவதி குழந்தைக்கு உதவ அழைப்பு
வினோத நோயால் அவதி குழந்தைக்கு உதவ அழைப்பு
ADDED : ஜூன் 15, 2024 01:36 AM

புதுடில்லி:முதுகெலும்பு தசைச் சிதைவு என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்ட 16 மாத குழந்தைக்கு 17 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்தை வாங்குவதற்காக உதவிடும்படி, ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைநகரைச் சேர்ந்த வெஹந்த் ஜெயின் 16 மாத ஆண் குழந்தை. இந்த குழந்தை முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் அவதிப்படுகிறது. குழந்தைக்கு இரண்டு வயதிற்குள் மருத்துவர்கள் பரிந்துரைத்த ஊசியை செலுத்த வேண்டும். அதன் விலை ஜி.எஸ்.டி.,யை சேர்த்து, 17.5 கோடி ரூபாய்.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோரால் அந்தத் தொகையை திரட்டுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குழந்தையின் தந்தை பொறியாளர், தாய் ஒரு பட்டயக்கணக்காளர். ஆயினும் குழந்தையை பராமரிப்பதற்காக தன்னுடைய வேலையை அவர் விட்டுவிட்டார்.
வீட்டில் இருக்கும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சஞ்சய் சிங், 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். குழந்தையின் உயிர்காக்க உதவிடும்படி, பொதுமக்களை சஞ்சய் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.