உ.பி.,யில் யோகி - மவுரியா இடையே மீண்டும் 'லடாய்'
உ.பி.,யில் யோகி - மவுரியா இடையே மீண்டும் 'லடாய்'
உ.பி.,யில் யோகி - மவுரியா இடையே மீண்டும் 'லடாய்'
ADDED : ஜூலை 30, 2024 09:42 PM

லக்னோ : உ.பி.,யில் பா.ஜ., தலை மையிலான ஆட்சியில் முதல்வர் - துணை முதல்வர் இடையே மீண்டும் 'லடாய்' அரங்கேறியுள்ளது.
சமீபத்திய லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், 36ஐ மட்டுமே பா.ஜ., கைப்பற்றியது. இதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போக்கே காரணம் என்ற ரீதியில், 'ஆட்சியை விட கட்சியே முக்கியம்' என்று, தோல்விக்கான ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் மவுரியா
பேசினார்.
யோகியின் நிகழ்ச்சிகளை மவுரியா புறக்கணித்தார்; மேலிடம் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தது.
நேற்று, கட்சியின் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கூட்டத்தில், மவுரியா பங்கேற்றார்.
யோகி வருவதற்குள், 'படபட'வென 'மைக்'கைப் பிடித்துப் பேசிவிட்டு, நடையைக் கட்டினார்.
'தேர்தல்களில், அரசின் வலிமையை விட, கட்சியின் வலிமையை வைத்துத் தான் நாம் போட்டியிட்டு வருகிறோம். கடந்த 2014 லோக்சபா தேர்தலிலும், 2017 சட்டசபை தேர்தலிலும் நான் வென்றபோது, ஆட்சியில் இல்லை.
'ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம். 'நாம் ஆட்சியில் உள்ளோம், அதனால் வெற்றி நமக்கே' என்று அதீத நம்பிக்கையுடன் இருந்ததால் தான், இந்தத் தோல்வி ஏற்பட்டுஉள்ளது.
'இதை உணர்ந்து, 2027 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்' என்று கூறிவிட்டு, மவுரியா கிளம்பியதால், யோகி - மவுரியா, 'லடாய்' இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பது அப்பட்டமாகி உள்ளது.