கே.எம்.எப்.,பில் பால் உற்பத்தி 'கிடுகிடு'
கே.எம்.எப்.,பில் பால் உற்பத்தி 'கிடுகிடு'
கே.எம்.எப்.,பில் பால் உற்பத்தி 'கிடுகிடு'
ADDED : ஜூன் 22, 2024 04:45 AM
பெங்களூரு, : கர்நாடகாவில் கே.எம்.எப்., பால் உற்பத்தியில், சாதனை செய்துள்ளது. ஜூன் 18ல் ஒரே நாள் 98.87 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது.
கர்நாடகாவின், கே.எம்.எப்.,பில் பால் உற்பத்தி, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நல்ல மழை பெய்ததால், தீவனம் செழிப்பாக கிடைக்கிறது. இதன் பயனாக பால் உற்பத்தி அதிகரிக்கிறது. ஜூன் 18ல், ஒரே நாளில் 98.87 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. கே.எம்.எப்.,பின் 50 ஆண்டு கால வரலாற்றில், ஒரே நாளில் இவ்வளவு பால் உற்பத்தியானது, இதுவே முதன் முறையாகும்.
கடந்த 2022, ஜூன் 29ல் 94.18 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. இது தான், இதுவரையிலான, அதிகபட்ச அளவாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து, தற்போது 98.87 லிட்டரை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் பால் உற்பத்தி, ஒரு கோடி லிட்டரை எட்டும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.