அனந்தபத்மநாபா கோவிலுக்கு கர்நாடகா அர்ச்சகர் நியமனம்
அனந்தபத்மநாபா கோவிலுக்கு கர்நாடகா அர்ச்சகர் நியமனம்
அனந்தபத்மநாபா கோவிலுக்கு கர்நாடகா அர்ச்சகர் நியமனம்
ADDED : ஜூன் 18, 2024 06:26 AM

பெங்களூரு: கேரளாவின் அனந்தபத்மநாபா சுவாமி கோவிலின் தலைமை அர்ச்சகராக, கர்நாடகாவை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவில், இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும், இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியை போன்றே, மிகவும் புராதன கோவிலாகும்.
அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு, கர்நாடகாவை சேர்ந்த சத்ய நாராயணா தலைமை அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். தட்சின கன்னடா, பெல்தங்கடியின், கொக்கடா கிராமத்தை சேர்ந்தவர் சத்ய நாராயணா. இவரது தந்தை சுப்ராயா தோட்தில்லயாவும், இரண்டு ஆண்டுகள் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில், அர்ச்சகராக பணியாற்றினார்.
சத்ய நாராயணாவின் தாத்தா நாராயணா, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் பல ஆண்டுகள் அர்ச்சகராக சேவையாற்றினார். சத்ய நாராயணா கடந்த 20 ஆண்டுகளாக, பெங்களூரில் வசிக்கிறார்.
அக்கர தேசி சமுதாய சங்கம், இவரை அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு தலைமை அர்ச்சகராக நியமிக்கும்படி, சிபாரிசு செய்தது. இதன்படி நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.