கர்நாடக எம்.பி.,க்கள் கன்னடத்தில் பதவியேற்பு
கர்நாடக எம்.பி.,க்கள் கன்னடத்தில் பதவியேற்பு
கர்நாடக எம்.பி.,க்கள் கன்னடத்தில் பதவியேற்பு
ADDED : ஜூன் 25, 2024 04:42 AM
பெங்களூரு, : கர்நாடக எம்.பி.,க்கள், லோக்சபாவில் கன்னட மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., - 17, ம.ஜ.த., - 2, காங்கிரஸ் - 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், முதன் முறையாக நேற்று லோக்சபா பார்லிமென்ட் கூடியது.
இதையடுத்து, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சியினர் நேற்று எம்.பி.,க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதில், கர்நாடகவினரும் நேற்று பதவி ஏற்றனர்.
மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய சிறு, குறு தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா, மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா உட்பட கர்நாடக எம்.பி.,க்கள் கன்னட மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அனைவரும் கடவுள் பெயரில் உறுதி மொழி அறிக்கை வாசித்தனர். இவர்களுக்கு, லோக்சபாவின் இடைக்கால சபாநாயகர் பார்த்துஹரி மஹதப், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்துத் தெரிவித்தார்.